2011-06-14 15:41:40

புதிய நற்செய்தி அறிவித்தல், வீடுகளுக்குள்ளும் இடம்பெறவேண்டும் - கர்தினால் விடுக்கும் அழைப்பு


ஜூன் 14,2011. புதிய நற்செய்தி அறிவித்தல் என்பது தினசரி வாழ்வு நடவடிக்கைகள் போல் சாதாரணமாக இருக்க வேண்டிய ஒன்று, ஏனெனில் அது வீடுகளிலேயே இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார் பிரசிலின் சாவ் பவுலோ பேராயர் கர்தினால் Odilo Scherer.
மத்தியக்கிழக்கு நாடுகள், துருக்கி, ஐரோப்பா என உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம்பெற வேண்டிய புதிய நற்செய்தி அறிவித்தல், வீடுகளுக்குள்ளும் இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்தார் அவர்.
நற்செய்தி அறிவிப்பாளர்கள் நம் குடும்பங்களுக்குள்ளேயே உள்ளார்கள் என்ற கர்தினால் Scherer, நற்செய்தி என்பது நமக்கு மட்டும் நன்மை தரும் சலுகை அல்ல, மாறாக உலகமனைத்திற்கும் நன்மையைக் கொணரவல்ல ஒன்று என மேலும் கூறினார்.
உலகமெங்கும் சென்று அனைத்துப் படைப்புகளுக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமையை நாம் ஒவ்வொருவரும் ஏற்று நடத்தவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு ஊக்கமளிக்கும் திருப்பீட அவையின் அங்கத்தினரான பிரசில் கர்தினால் Scherer.








All the contents on this site are copyrighted ©.