2011-06-13 15:57:18

ஜூன் 14 வாழ்ந்தவர் வழியில்.....


Edward Cuyler Hammond என்ற அமெரிக்க அறிவியலாளர் கொள்ளைநோயியல் ஆய்வாளர். இவர் புகைத்தலுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளது என்பதை முதன் முதலில் கண்டறிந்தவர். இவர் அமெரிக்கப் புற்றுநோய்க் கழக ஆராய்ச்சிப் பரிவின் இயக்குனராகப் பணிபுரிந்த சமயம் 1957ம் ஆண்டு ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆய்வாளர்களிடம், சிகரெட் புகைத்தல், நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணம் என்றும் மேலும் பல நோய்கள் மீது அது கடும் தாக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் கூறினார். புகைபிடிப்பதால் வரும் கேடுகள் குறித்த மேலும் பல தகவல்களையும் Hammond வெளியிட்டார். புகைத்தல் நலவாழ்வுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதற்கான ஆதாரங்கள் 1915ம் ஆண்டிலிருந்தே இருக்கின்றன. நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிர்ச்சியடைய வைக்கின்றது. 1930ம் ஆண்டில் 2,500 ஆக இருந்த இவ்வெண்ணிக்கை 1956ம் ஆண்டில் 29 ஆயிரமாக உயர்ந்தது என்பதை ஆதாரங்களுடன் அறிவித்தார். 1912ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி பிறந்த Hammond 1986ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி காலமானார். இவரும் ஒரு கட்டத்தில் சிகரெட் புகைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.