2011-06-13 15:55:02

குழந்தைத் தொழிலைத் தடை செய்யும் அரசு சட்டங்கள் இருந்தாலும் இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் தொடர்கிறது


ஜூன் 13,2011. கண்ணாடித் துண்டுகள், இரசாயனப் பொருட்கள், வெடி மருந்துகள் மத்தியில் குழந்தைகள் தொழிலாளிகளாய் இருக்கும் அவலம் இந்தியாவில் இருந்து ஒழியவில்லை என்று இந்திய குரு ஒருவர் கூறினார்.
ஜூன் 12 இஞ்ஞாயிறன்று குழந்தைத் தொழிலை ஒழிக்கும் உலக நாள் கடைபிடிக்கப்பட்டதையோட்டி, UCAN செய்தி நிறுவனத்திடம் பேசிய V Care என்ற அரசுசாரா அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Jose Kuriakose இவ்வாறு கூறினார்.
குழந்தைத் தொழிலைத் தடை செய்து அரசு பல சட்டங்களை அமுல்படுத்தியிருந்தாலும், இந்தக் கொடுமை இன்னும் இந்தியாவில் தொடர்கிறதென்றும், குழந்தைகள் பலர் தொழில் செய்யும் சூழ்நிலைகள் அவர்களது நலனுக்கு பெரும் ஆபத்தானவை என்றும் இந்தியத் தன்னார்வ நலக்கழகத்தின் அதிகாரி Binoy Mathews கூறினார்.
முறைசாரா குடிசைத் தொழில்களிலும், குடும்பத் தொழில்களிலும் ஈடுபட்டிருப்போரில் 20 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் குழந்தைகளே என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தொழில் பணிக் குழுவின் அண்மைய அறிக்கை ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.