2011-06-11 16:53:46

கிறிஸ்தவ விரோதப்போக்கு அதிகரித்து வருவது குறித்து ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை கவலையை வெளியிட்டுள்ளது


ஜூன் 11,2011. இன்றைய உலகில் கிறிஸ்தவ விரோதப்போக்கு அதிகரித்து வருவது குறித்து இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் ஆயர் பேரவை தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
பொதுநலனுக்கு எதிராகச் செல்லும் தீவிரவாதக் குழுக்களால் அரசியல் நோக்கங்களுக்காக மத வேறுபாடுகள் பெரிதுபடுத்தப்படுவதாகக் குறைகூறும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் ஆயர் பேரவை, இத்தகையைப் போக்குகள் சமூகத்தில் ஆர்வமுடைய அனைத்துக் குழுக்களாலும் கண்டிக்கப்பட வேண்டும் என விண்ணப்பிக்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கு என்பது அவ்வப்போது நடப்பதல்ல, மாறாக சில இடங்களில் அது தொடர் நடவடிக்கையாக உள்ளது எனக்கூறும் ஆயர்களின் அறிக்கை, எகிப்து காப்டிக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்த கண்டனத்தையும் வெளியிட்டது.








All the contents on this site are copyrighted ©.