2011-06-11 16:53:30

Swazilandல் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து தென்மண்டல ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவை கவலை


ஜூன் 11,2011. ஆப்ரிக்க நாடான Swazilandல் வன்முறை நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கவலையை வெளியிட்டுள்ள தென்மண்டல ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவை, மனித உரிமைகள் காக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதித்தலைவர்களின் ஒத்துழைப்பிற்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது.
ஆப்ரிக்கக் கண்டத்தின் ஒரே முடியாட்சி நாடான Swazilandல் வாழும் 10 இலட்சம் மக்களும், ஆட்சியாளரின் பாராமுக நடவடிக்கைகளால் பெரும் வேதனைகளை அனுபவித்து வருவதாக ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
Swazilandன் Manzini நகரில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டம், பாதுகாப்புத்துறையால் ஒடுக்கப்பட்டது குறித்து கவலையை வெளியிடும் ஆயர்கள், Swazilandஐ அழிவிலிருந்து காப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுவதாக விண்ணப்பித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.