2011-06-08 15:58:44

ஜூன் 9, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


1949ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசு எனுமிடத்தில் பிறந்த கிரண் பேடி, இந்தியாவின் இந்தியக் காவல் சேவைப்பணியில் 1972ம் ஆண்டு சேர்ந்த முதல் ஐ.பி.எஸ் பெண் அதிகாரியாவார். 2007ம் ஆண்டு விருப்பப்பணி ஓய்வு பெற்றபின், சமூகப் பணியாளராக நலப்பணிகள் செய்து வருகிறார். தமது காவல் பணிக்காலத்தில் வகித்த பல்வேறு பதவிகளிலும் சிறப்புற பணியாற்றி புகழ் பெற்றவர். தமது 22ம் வயதில் 1971ம் ஆண்டு ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவருமாவார். 1993-1995ம் ஆண்டுகளில் டில்லியின் சிறைத்துறை பொது ஆய்வாளராக இருந்தபோது, 10,000 கைதிகளை வைத்திருக்கக்கூடிய உலகின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றாகக் கருதப்படும் திகார் சிறையில் அவராற்றிய சீர்திருத்தங்களும் முன்னேற்றங்களும் பலரின் பாராட்டைப் பெற்றதோடு, 1994ம் ஆண்டிற்கான மதிப்புமிக்க இரமோன் மகசேசே விருது பெறவும் காரணமாக இருந்தது.
நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ம் ஆண்டு நவ்ஜோதி என்ற அமைப்பையும், சிறைச் சீர்திருத்தங்கள், போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994ம் ஆண்டு இந்தியா விஷன் பௌண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவி, தொடர்ந்து சமூகப்பணியாற்றி வருகிறார் கிரண் பேடி.








All the contents on this site are copyrighted ©.