2011-06-07 14:56:56

மணமுறிவுச் சட்டப்பரிந்துரைக்குப் பிலிப்பீன்ஸ் திருச்சபை எதிர்ப்பு


ஜூன் 07, 2011. மணமுறிவைச் சட்டமாக்கும் நோக்கில் பிலிப்பீன்ஸ் நாடாளுமன்றத்திற்கு முன் வைக்கப்பட்டிருக்கும் சட்டப்பரிந்துரைக்குத் தங்கள் எதிர்ப்பை கிறிஸ்தவர்கள் வெளியிடவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
உலகிலேயே மணமுறிவைச் சட்டமாக ஏற்காமல் இருந்த இரு நாடுகளுள் ஒன்றான மால்ட்டாவில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து வாக்கெடுப்பில், மணமுறிவுக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளது பற்றிக் குறிப்பிட்ட பிலிப்பீன்ஸ் ஆயர்கள், திருமணங்களின் முறிவுபடாத் தன்மையை பாதுகாப்பதில் பிலிப்பீன்ஸ் தலத்திருச்சபை உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தனர். குடும்பங்களை அழிக்க முயலும் மணமுறிவுச் சட்டம் அமுலுக்கு வந்தால், சமூக மதிப்பீடுகளின் அழிவுக்கே அது இட்டுச்செல்லும் என ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.