2011-06-07 14:57:51

நாட்டிற்குள் வாழவும், நாட்டை விட்டு வெளியேறவும் அஞ்சுகின்றனர் ஈராக் கிறிஸ்தவர்கள்


ஜூன் 07, 2011. நாட்டிற்குள் வாழவும், நாட்டை விட்டு வெளியேறவும் அஞ்சி ஈராக் கிறிஸ்தவர்கள், தங்கள் வருங்காலம் குறித்த கேள்விக்குறியுடன் வாழ்வதாக அந்நாட்டுப் பேராயர் ஒருவர் தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
தங்களுக்கு ஈராக்கில் வருங்காலம் இல்லை என அஞ்சும் ஈராக் கிறிஸ்தவர்கள், அண்டை நாடுகளின் பதட்டநிலைகளால் அங்குச் சென்று குடியேறவும் அஞ்சுவதாகக் கூறிய கல்தேய ரீதி பேராயர் Bashar Warda, அண்மையில் அந்நாட்டின் மொசூல் நகருக்கருகே நான்கு குழந்தைகளின் தந்தையாகிய அரக்கான் யாக்கோப் என்ற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கிறிஸ்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
மத மற்றும் அரசியல் தொடர்புடைய வன்முறைகளில் 2002ம் ஆண்டிலிருந்து இதுவரை 570க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறினார் பேராயர்.
பல கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆவலை வெளியிடுவதாகவும், ஆனால் அண்மை நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவின் அரசியல் பதட்ட நிலைகளால் அச்சம் கொண்டுள்ளதாகவும் மேலும் கூறினார் பேராயர் Warda.








All the contents on this site are copyrighted ©.