2011-06-03 15:38:24

சீன அரசு மேற்கொண்டுள்ள அடக்கு முறைகள் தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளன - Human Rights Watch அறிக்கை


ஜூன் 03,2011. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அனைவரும், இருபது ஆண்டுகளுக்கு முன் Tiananmen சதுக்கத்தில் மக்கள் சந்தித்த அதே கொடுமைகளை இன்றும் சந்திக்க வேண்டியுள்ளதென்று மனித உரிமைகளுக்குப் போராடும் ஓர் ஆசிய நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
1989ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி சீனாவின் தலைநகர் Beijingல் அமைந்துள்ள Tiananmen சதுக்கத்தில் பல ஆயிரம் இளையோர் மேற்கொண்ட போராட்டங்கள் இராணுவ பலம் கொண்டு அடக்கப்பட்டது.
வருகிற சனிக்கிழமை அந்த நாள் நினைவு கூறப்படும் வேளை, இன்றைய சீன அரசு அன்று நடந்து கொண்டதைப் போல் இன்றும் தன் அடக்குமுறைகளைத் தொடர்கிறதென்று மனித உரிமைகள் காவல் (Human Rights Watch) என்ற அமைப்பின் ஆசிய கிளையின் இயக்குனர் Sophie Richardson, UCAN செய்திக்கு அளித்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tiananmen சதுக்கத்தில் உயிர் இழந்தவர்கள் மற்றும் காயப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘Tiananmen அன்னையர்’ என்ற அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், சீனாவில் கடந்த சில மாதங்களில் சீன அரசு மேற்கொண்டுள்ள அடக்கு முறைகள் 1989க்குப் பிறகு தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.