2011-06-01 16:30:32

ஜூன் 2, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவரும், அறிஞரும் மருத்துவராகவும் அறியப்பட்ட பி. கந்தப்பிள்ளை குறித்து இன்று காண்போம். தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்ற ஆறுமுக நாவலரின் தந்தை இவர். யாழ்ப்பாணத்தின் நல்லூரைச் சேர்ந்த கந்தப்பிள்ளை, தமிழ் மட்டுமன்றி டச்சு, போர்த்துக்கீசியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அறிந்தவர். 18 ஆண்டுகளாக இவர் ஆராச்சி என்ற அரசுப்பணியாளராகத் தொழில் புரிந்து வந்ததனால், இவரை ஆராச்சிக் கந்தர் எனவும் அழைப்பர். இவரது தந்தை பரமானந்தர், பாட்டனார் இலங்கைக்காவல முதலியார் அனைவரும் தமிழ் அறிஞர்கள். கந்தப்பிள்ளைக்கு ஆறுமுக நாவலருடன் சேர்த்து ஐந்து ஆண் பிள்ளைகளும் மூன்று பெண்களும் இருந்தனர்.
பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற பின்னர் கந்தப்பிள்ளை தமது இறுதிக் காலத்தை நாடகங்கள் எழுதுவதில் செலவிட்டார். சந்திரகாச நாடகம், இராம விலாசம், நல்லை நகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், சமநீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி விலாசம் முதலான 21 நாடகங்களை இவர் இயற்றியுள்ளார்.
1766ம் ஆண்டு பிறந்த ப. கந்தப்பிள்ளை, 1842ம் ஆண்டு ஜூன் 2ம் நாள் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.