2011-05-31 15:50:50

ஹங்கேரியில் 6 நாள் மேய்ப்புப்பணிச் சார்ந்த பயணம் மேற்கொள்கிறார் பேராயர் வேலியோ


மே 31, 2011. இப்புதன் முதல் ஆறு நாட்களுக்கு ஹங்கேரியில் மேய்ப்புப்பணிச் சார்ந்த பயணத்தை மெற்கொள்ள உள்ளார் குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் அந்தோனியோ மரிய வேலியோ.
இவ்வியாழனன்று, பூடாபெஸ்டில் இடம்பெறும் கிறிஸ்தவ, யூத மற்றும் இஸ்லாமியர் இடையேயான கருத்தரங்கில் உரையாற்ற உள்ள பேராயர், அதற்கு மறு நாள் 'ஐரோப்பாவிற்கான புதிய நற்செய்தி அறிவிப்பில் திருத்தலங்களின் பங்கு' என்பது குறித்து உரை வழங்குவார்.
சனிக்கிழமையன்று, ஹங்கேரியின் Mariapocs திருத்தலத்தில் 'நாடோடி இனத்தவரின் குடும்பங்கள்' என்ற தலைப்பிலான கலந்துரையாடலிலும் கலந்து கொள்வார் பேராயர் வேலியோ.
ஞாயிறன்று அந்நாட்டில் நிறைவேற்ற உள்ள திருப்பலியில் நாடோடி இனத்தைச்
சேர்ந்த 33 குழந்தைகளுக்குப் புது நன்மை வழங்குவார்.








All the contents on this site are copyrighted ©.