2011-05-31 15:54:57

புகையிலைப் பயன்பாட்டால் ஆண்டுக்கு 60 லட்சம் மரணம்


மே 31, 2011. ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் உயிரிழப்பதில், 70 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் உள்ளனர் என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார் எனக்கூறும் இவ்வமைப்பு, புகையிலை மற்றும் சிகரெட்டால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழப்பது, 2030க்குள் 80 இலட்சத்திற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எனவும் கணித்துள்ளது.
மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், நீரழிவு நோய், பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, இரத்தக்கொதிப்பு ஆகியவைகளுக்குக் காரணமாக இருக்கும் புகையிலைப் பயன்பாடு, மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கியக் காரணியாக உள்ளது.








All the contents on this site are copyrighted ©.