2011-05-28 14:44:06

மத்தியக் கிழக்குப் பகுதியின் மதங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்


மே 28, 2011. பொது நலனுக்கான ஒத்துழைப்புக்கும் அமைதியை ஊக்குவிப்பதற்கும் உதவும் நோக்குடன் மத்தியக் கிழக்குப் பகுதியின் மதங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது மத்தியக் கிழக்கு ஆயர் பேரவையின் சிறப்பு அவை.
உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச் தலைமையில் அண்மையில் கூடிய இச்சிறப்பு அவை, அனைத்து மதத்தவரின், இனத்தவரின் கலாச்சாரப் பிரிவினரின் சரிநிகர் உரிமைகளுக்கு உறுதி வழங்கப்பட வேண்டும் என தல மற்றும் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பையும் விடுத்துள்ளது.
சகிப்புத்தன்மை, ஒருவர் ஒருவரை புரிந்து கொள்ளுதல் மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாதது மதங்களிடையேயான இணக்க வாழ்வே என்பதையும் ஆயர்களின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
மத்தியக் கிழக்குப் பகுதிக்கான ஆயர்களின் அடுத்த சிறப்பு அவைக்கூட்டம் ஜூலை 6 மற்றும் 7 தேதிகளில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.