2011-05-28 14:48:51

கம்யூனிச சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது


மே 28, 2011. சீனாவில் நாத்தீக கம்யூனிச ஆட்சி இடம்பெறுகின்ற போதிலும், அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைப் பெருகிவருவதும், சமூகத்தில் கிறிஸ்தவத்தின் தாக்கம் அதிகரித்து வருவதும் குறிப்பிடக்கூடிய ஒரு கூறாக உள்ளது என்கிறார் சீனாவின் எழுத்தாளர் ஜியாங் யுவான்லாய்.
சீனாவில் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலை குறித்து தாய்வானில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய சீன கிறிஸ்தவ எழுத்தாளர் யுவான்லாய், சீனாவில் தற்போது 10 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்வதாகவும் அதில் 1கோடி பேர் கத்தோலிக்கர்கள் எனவும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.