2011-05-27 15:28:23

உரோம் நகர் வந்துள்ள ஆந்திர மற்றும் கேரள மாநில ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு


மே 27,2011. ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆறு திருச்சபைத் தலைவர்கள் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம் பேராயரை இவ்வெள்ளியன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த சில வாரங்களாக இந்திய ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து வரும் திருத்தந்தை, இவ்வெள்ளி காலை மேலும் ஏழு இந்தியத் திருச்சபைத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து உரையாடினார்.
கேரளாவின் திருவனந்தபுரம் பேராயர் மரிய கல்லிஸ்ட் சூசை பாக்கியத்தை முதலில் தனியாகச் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஆயர் இன்னையா சின்ன அட்டகட்லா, விஜயவாடா ஆயர் பிரகாஷ் மல்லவரப்பு ஆகியோரையும், கேரளாவின் கொச்சின் ஆயர் ஜோசப் கரியில், கன்னூர் ஆயர் வர்கீஸ் சக்கலக்கல், கோட்டபுரம் ஆயர் ஜோசப் கரிக்கசேரி, மற்றும் கோழிக்கோடு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி வின்சென்ட் அரக்கல் ஆகியோரையும் குழுவாகச் சந்தித்து, அந்தந்த மறைமாவட்டங்கள் குறித்து அவர்களுடன் உரையாடினார்.








All the contents on this site are copyrighted ©.