2011-05-27 15:28:09

இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்


மே 27,2011. இலங்கையின் Galle மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்தந்தை Raymond Wickramasingheயை இவ்வெள்ளியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்தார்.
"இலங்கையின் நமதன்னை" என்ற தேசிய குருமடத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ள புதிய ஆயர் Wickramasinghe, 1962ம் ஆண்டு இரத்னபுரா மறைமாவட்டத்தின் Uthuwankanda எனுமிடத்தில் பிறந்தவர். 1989ம் ஆண்டு குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டு, பங்கு குருவாகவும், Galle மறைமாவட்ட இளங்குருமட அதிபராகவும் ஆயரின் செயலராகவும், மறைமாவட்டக் காரித்தாஸ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள இவர், உரோம்நகர் Alphonsianum கத்தோலிக்க நிறுவனத்தில் பயின்று, முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
அருள்தந்தை Wickramasinghe புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள Galle மறைமாவட்டத்தில் உள்ள 13 பங்குத்தளங்களில் 33 குருக்கள் மற்றும் 97 அருள்சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.