2011-05-26 15:49:38

ஈராக் பேராயர் Louis Sakoவுக்கு அண்மையில் வழங்கப்பட்ட விருது


மே 26,2011. கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே உரையாடல்கள் தொடர வேண்டும் என்றும், இவ்விரு மதத்தவரிடையே அமைதிக்காக உழைக்கும் அர்ப்பணம் இன்னும் ஆழப்பட வேண்டும் என்றும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பேராயர் Louis Sako கூறினார்.
பேராயர் Louis Sako, ஈராக்கில் மனித உரிமைகள் மற்றும் மதங்களுக்கிடையே உரையாடல் ஆகியவற்றை வளர்க்கும் வண்ணம் தொடர்ந்து உழைத்து வருவதைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு அண்மையில் Frankfurt நகரில் விருது ஒன்று வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெறும்போது, பேராயர் Sako, கலாச்சாரங்களும், மதங்களும் ஒன்றை ஒன்று மதித்து வாழ்வதே உலகில் அமைதியை வளர்க்கும் சிறந்த வழி என்று கூறினார்.
62 வயது நிரம்பிய Kirkuk உயர்மறைமாவட்டப் பேராயர் Louis Sako, அமைதி மற்றும் மனித உரிமைகளை வளர்க்கும் பணியில் காட்டி வரும் ஆர்வத்தை முன்னிட்டு, 2008ம் ஆண்டு Defensor Fidei என்ற விருதையும், 2010ம் ஆண்டு Pax Christi விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.