2011-05-25 16:27:35

பெரு நாட்டில் கருக்கலைத்தலுக்கு எதிராக 30,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பேரணி


மே 25,2011. ‘வாழ்வுக்கான நடைப்பயணம்’ என்று பெரு நாட்டின் தலைநகரான Limaவில் அண்மையில் நடந்த பேரணியில் 30,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
பெரு நாட்டில் கருக்கலைத்தலை சட்டமயமாக்கும் முயற்சியை எதிர்த்து, இயற்கை வழியில் குடும்பக் கட்டுப்பாட்டு மையம் என்ற அமைப்பு பெரு நாட்டின் தலைநகராகிய Limaவில் இப்பேரணியை நடத்தியது.
இப்பேரணியில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையைக் காணும்போது, இந்நாட்டில் கருக் கலைத்தல் சட்டமயமாவதை பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் என்பது தெளிவாகிறது என்று Lima வின் துணை ஆயர் Raul Chau கூறினார்.
சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள், தங்கள் குரலை அரசு கேட்க வேண்டும் என்று இப்பேரணி மூலம் உணர்த்தியுள்ளனர் என்றும், வருகிற ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் கருக்கலைத்தல் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் இப்பேரணியை ஏற்பாடு செய்த Martin Tantalean கூறினார்.








All the contents on this site are copyrighted ©.