2011-05-25 16:25:09

திருப்பீட அதிகாரிகள் கர்தினால் Tauranம், பேராயர் Celataவும் மேற்கொண்டுள்ள தென் கொரியப் பயணம்


மே 25,2011. மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauranம், அவ்வவைச் செயலர் பேராயர் Pier Luigi Celataவும் இவ்வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை தென் கொரியாவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்கொரிய ஆயர்களின் மத உரையாடலுக்கான அவை விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டிற்குச் சென்றுள்ள இவ்விரு திருப்பீட அதிகாரிகளின் பயணத் திட்டத்தில் தென்கொரிய அரசுத் தலைவர், கலாச்சாரத் துறைக்கான அமைச்சர், மற்றும் மத விவகாரங்களுக்கான இயக்குனர் ஆகியோரைச் சந்தித்து உரையாடும் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
கொரியாவின் புத்த மற்றும் கன்பூசிய மையங்களை இவ்விருவரும் பார்வையிடுவர் என்று திருப்பீட அறிக்கையொன்று சொல்கிறது.
"திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கியுள்ள படிப்பினைகளின் அடிப்படையில் மதங்களுக்கிடையேயான உரையாடல்" என்ற தலைப்பில் Seoul நகரின் உயர் குருமடத்தில் நடைபெறும் கருத்தரங்கிலும், ஊடகத் துறை பிரதிநிதிகள் சந்திப்பிலும் கர்தினால் Tauran இப்பயணத்தின்போது கலந்து கொள்வார்.








All the contents on this site are copyrighted ©.