2011-05-25 16:26:47

இலங்கையில் கல்லூரி மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சிகள் அளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு


மே 25,2011. இலங்கையில் கல்லூரிகளில் புதிதாய் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இராணுவ அடிப்படை பயிற்சிகளைச் சொல்லித் தர இலங்கை அரசு முயன்று வருவதற்கு அந்நாட்டின் கிறிஸ்தவ மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இத்திங்களன்று இலங்கையின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஏறத்தாழ 22000 மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இராணுவ அடிப்படைப் பயிற்சிகள் உடனே நிறுத்தப்பட வேண்டுமென்று அருள்தந்தை Dilan Perera இராணுவ அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார்.
இந்தப் பயிற்சி முறைகள் குறித்து பல பெற்றோரும் தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளதால், அவர்களது முறையீடுகளைத் தீர்க்கும் வரை இந்த பயிற்சிகள் துவக்கப்படக் கூடாதென்று இலங்கை உச்ச நீதி மன்றம் ஏற்கனவே இராணுவத்திடம் கூறியிருந்ததென்று UCAN செய்தியொன்று கூறுகிறது.
தலைமைத்துவம் குறித்த பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றால், அவற்றைக் கல்விக்கூடங்களே அளிப்பது சிறந்ததேயொழிய, இராணுவம் அல்ல என்று ஆங்கலிக்கன் இறைபணியாளர் Marimuthupillai Sathivel கூறினார்.








All the contents on this site are copyrighted ©.