2011-05-21 15:27:58

பள்ளிகளில் நட்புணர்வு கற்பிக்கப்பட வேண்டும் என்கின்றது வத்திக்கான்-இஸ்லாம் கூட்டறிக்கை.


மே 21, 2011. ஒவ்வோர் இளையோரும் தங்கள் மதத்தனித்தன்மையில் வேரூன்றி வாழவும் பிற மதங்களின் தனித்தன்மைக்குத் தங்களை திறந்தவர்களாகச் செயல்படவும் உதவுவதாக கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும் என்கிறது, திருப்பீட அவை மற்றும் இஸ்லாம் அமைப்பு இணைந்து நடத்திய கூட்டத்தின் இறுதி அறிக்கை.
மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை மற்றும் மதங்களிடையேயான உறவு குறித்த கல்விக்கான ஜோர்தான் நாட்டு அமைப்பு இணைந்து நடத்திய இரண்டு நாள் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, மாணவர்கள் பகைமையைக் கற்றுக்கொள்ள அல்ல, மாறாக, தங்களைத் திறந்தவர்களாகச் செயல்பட கல்வி நிலையங்கள் உதவவேண்டும் என்கிறது.
மனித வாழ்வு என்பது புனிதமானது, அதற்கு மீறமுடியாத உரிமைகள் உள்ளன எனக் கூறும் இந்த கூட்டு அறிக்கை, வேறுபாடுகளை மதித்து புரிந்துகொள்வது, உண்மையான பேச்சுவார்த்தைகளுக்கான முன் நிபந்தனை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.