2011-05-20 15:55:05

ஜப்பானில் உண்டான நிலநடுக்கம் பெருங்கடலின் தரையை 20 மீட்டர் தள்ளி வைத்துள்ளது


மே 20,2011. மார்ச் 11ம் தேதி ஜப்பானில் உண்டான நிலநடுக்கம் அங்குள்ள பெருங்கடலின் தரையை 20 மீட்டர், அதாவது 65 அடி தள்ளி வைத்ததாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த நிலநடுக்கம் உண்டான சில நாட்களில் இது குறித்து வெளியான அறிக்கை பூமியில் இருந்து எடுக்கப்பட்ட ஓர் அளவு என்றும், தற்போது வெளிவந்துள்ள அளவுகள் கடலுக்கடியில் வைக்கப்பட்டிருந்த கருவிகளின் கணிப்புகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
9.0 ரிக்டர் அளவு வலுமிக்க இந்த நிலநடுக்கத்தின் விளைவுகள் பூமியிலிருந்து அளக்கப்பட்ட கணிப்புக்களை விட, கடலிலிருந்து அளக்கப்பட்ட கணிப்புக்கள் இரு மடங்கு அதிகம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
நிலநடுக்கம் உண்டான Sendai நகரத்தின் கடற்கரையில் இருந்து 130 கிலோமீட்டர் தூரத்தில் கடலில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கருவிகளில் பதிந்த அளவுகள் இந்த நிலநடுக்கத்தின் வீரியத்தை இன்னும் அறிந்து கொள்ள உதவியாக உள்ளன என்று முனைவர் Mariko Sato, BBC நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.இந்த நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றைக் குறித்து காவல் துறையினர் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, இந்தப் பேரழிவில் 15000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும் இன்னும் 11000 க்கும் அதிகமானோர் காணமல் போயுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.