2011-05-17 15:11:58

மியான்மாரிலும் இலங்கையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உள்ளது கொரிய கத்தோலிக்க அமைப்பு.


மே 17, 2011. கொரியாவின் Gwangju மனித உரிமைகள் அமைதி அமைப்பால் அண்மையில் திரட்டப்பட்டுள்ள 90,000 டாலர் நிதியின் பெரும்பகுதி மியான்மார் அகதிகளுக்கும், உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார் கொரிய பேராயர் Hyginus Kim Hee-jung.
Gwangju பகுதியில் 1980ம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சியின்போது கொல்லப்பட்ட மக்களின் நினைவாக, கடந்த அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்டுள்ள இந்த மனித உரிமைகள் நிதி, உலகின் பல்வேறு நாடுகளில் சுதந்திரத்திற்காகப் போராடி வரும் மக்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் சியாங் மாய் பகுதியிலுள்ள பூர்வீகக்குடி பெண்களுக்கும், நேபாளத்தின் தலித் இன மக்களுக்கும் இந்நிதி மூலம் உதவ உள்ளதாகவும் அறிவித்தார் பேராயர் Kim Hee-jung.








All the contents on this site are copyrighted ©.