2011-05-17 15:11:36

சீனாவின் முக்கிய மருத்துவமனைகளில் எயிட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மறுக்கப்படுவதாக ILO உரைக்கிறது.


மே 17, 2011. எயிட்ஸ் நோய் குறித்த அறியாமையாலும் அச்சத்தாலும் சீனாவின் முக்கிய மருத்துவமனைகளில் எயிட்ஸ் நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மறுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. நிறுவனம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
134 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 7,40,000 பேர் HIV நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும் 1,05,000 பேர் AIDS நோயாளிகளாக உள்ளதாகவும் தெரிவிக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO வின் அறிக்கை, சீனாவில் இந்நோயாளிகளுக்கு மருத்துவப் பணியாளர்களால் சிகிச்சைகள் மறுக்கப்படுவதாகவும், அவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும் அண்மை ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறுகிறது.
சீனாவின் 103 நோயாளிகள் மற்றும் 23 மருத்துவப் பணியாளர்களிடம் அண்மையில் ILO அமைப்பு நடத்திய பேட்டிகள் மூலம், சீனாவில் எயிட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் மறுக்கப்படும் விவரங்கள் தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.