2011-05-14 16:43:17

நவீன உலகின் பிரச்சனைகள் குறித்து ஆராய திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம்


மே 14,2011. நவீன உலகின் உலக மயமாக்கல் மற்றும் அநீதிகளின் சூழலில் திருச்சபையின் சமூகக்கோட்பாடுகளின் பலம் குறித்து ஆராயும் நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் மூன்று நாள் கூட்டம் இத்திங்கள் முதல் உரோம் நகரில் இடம்பெற உள்ளது.
இன்றைய உலகின் பெரும் பிரச்சனைகள் குறித்து திருச்சபைக் குழுமங்கள் மற்றும் பல்வேறு பொதுநிலை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கவும், புதிய விழிப்புணர்வுகளை வழங்கவும் இக்கூட்டத்தின் தீர்மானங்கள் உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் இத்திருப்பீட அவையின் செயலர் ஆயர் Mario Toso.
"நீதியும் உலக மயமாக்கலும் : 'Mater et Magistra' முதல் 'Caritas et Veritate' வரை” என்ற தலைப்பில் இடம்பெற உள்ள இக்கூட்டம், திருச்சபையின் சமூகப்படிப்பினைகளின் ஒளியில் இன்றைய சமூகப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல உள்ளது.
நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், காங்கோ கர்தினால் லவுரென்ட் மொன்செங்வோ பசின்யா, ஹொண்டுராஸ் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிக்கஸ் மரதியாகா ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.