2011-05-13 15:29:43

சீனாவின் Sichuan பகுதி நிலநடுக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நினைவுச்சடங்கு


மே 13,2011. சீனாவின் Sichuan பகுதியில் 2008ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி நிகழ்ந்த நிலநடுக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவான இவ்வியாழனன்று, சீன அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு நினைவுச்சடங்கில் அப்பகுதியின் கத்தோலிக்கர்கள் கலந்து கொண்டனர்.
ரிக்டர் அளவில் 8 மதிப்புடைய இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியான Beichuan என்ற இடத்தில் நடைபெற்ற இந்த மௌன அஞ்சலியிலும், பிற செபங்களிலும் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
2008ம் ஆண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 68636 பேர் இறந்தனர்; 17516 பேர் காணமல் போயினர்; மற்றும் 360000 காயமடைந்தனர்.
மதியம் 2.28 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் Chengdu மறைமாவட்டத்தில் உள்ள 22 கோவில்கள் சேதமடைந்துள்ளன என்றும், இவைகளைக் கட்டியெழுப்ப நிதி உதவிகள் இல்லாததால், இக்கோவில்கள் இன்னும் பயன்பாட்டில் இல்லை என்றும் அருள்தந்தை Pan Hong'en கூறினார்.
மக்களின் பொது வாழ்வுக்கு கோவில்கள் ஒரு முக்கிய தளமாக இருப்பதால், அவை இல்லாதபோது, மக்களை ஒருங்கிணைத்துச் செயல்படுவதும் தடை படுகிறதென்று அருள்தந்தை Hong'en மேலும் கூறினார்.சீனாவைப் பொறுத்த வரை, கட்டிட வடிவில் கோவில்களை எழுப்பும் அதே வேளையில், மக்களை மீண்டும் ஆன்மீகத்திலும் கட்டியெழுப்பும் அவசியம் உள்ளதென்று அருள்தந்தை Zhang Yiquiang கூறினார்.







All the contents on this site are copyrighted ©.