2011-05-12 15:34:42

இந்தியாவில் உள்ள கிறிஸ்தவச் சமுதாயத்தைக் காக்கவேண்டும் - இந்திய அரசுத் தலைவரிடம் விண்ணப்பங்கள்


மே 12,2011. இந்தியாவில் உள்ள கிறிஸ்தவச் சமுதாயத்தைக் காக்கும்படி வலியுறுத்தி, இந்திய அரசுத் தலைவர் பிரதிபா பாட்டிலிடம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் சங்கமும், மத அடிப்படைவாதம் சாராத கத்தோலிக்க அமைப்பு ஆகிய இரு குழுக்களும் அண்மையில் இந்திய அரசுத் தலைவரைச் சந்தித்து, தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.
ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மத்திய இந்திய மாநிலங்களிலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய தெற்கு மாநிலங்களிலும் கடந்த மூன்று ஆண்டுகளாய் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்துள்ள வன்முறைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாகியுள்ளன என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.இக்குழுக்கள் அரசுத் தலைவரையும், துணைத் தலைவர் Mohammed Ansariயையும் நேரில் சந்தித்து சமர்ப்பித்துள்ள இந்த விண்ணப்பங்களில் காவிமயமான இந்திய மாநிலங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாய் 1000க்கும் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்றும், 100க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்குச் சாட்சி பகர உயிர் துறந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.