2011-05-09 15:57:25

கெய்ரோவில் கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல் தாக்குதல்


மே 09,2011. கடந்த சனிக்கிழமை இரவு எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஓர் இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பலால் காப்டிக் ரீதி கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் இரு கோவில்கள் தீக்கிரையாகியுள்ளன.
ஓர் இஸ்லாமியரைத் திருமணம் செய்துள்ள கிறிஸ்தவப் பெண் மதம் மாறுவதற்குத் தடை செய்யப்பட்டு, கிறிஸ்தவர்களால் கடத்தி வைக்கப்பட்டுள்ளார் என்ற ஆதாரமற்ற செய்தியின் அடிப்படையில் கெய்ரோவின் புறநகர்ப் பகுதியான புனித மேனாஸ் கோவிலை இவ்வன்முறை கும்பல் தாக்கியுள்ளது.
இதற்கிடையே, இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி, இஞ்ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களிலும் அந்நாட்டு கிறிஸ்தவர்கள் ஊர்வலங்களை மேற்கொண்டுள்ளனர்.
மதப் பகைமையை வளர்த்து, ஆட்சியைப் பிடிக்க முயலும் Salafists என்ற இஸ்லாமிய அடிப்படை வாதக்குழுவே இவ்வன்முறைகளுக்குக் காரணம் என்று செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
எகிப்தின் 8 கோடி மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.