2011-05-09 15:53:11

Aquileia மற்றும் Venice ஆகிய நகரங்களில் திருத்தந்தையின் திருப்பயணம்


மே 09,2011. கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்தாலியின் வடபகுதியில் உள்ள Aquileia மற்றும் Venice ஆகிய நகரங்களில் மேய்ப்புப் பணி சார்ந்த திருப்பயணம் மேற்கொண்டார்.
மிதக்கும் நகரம் என்று புகழ்பெற்ற வெனிஸ் நகரின் தெருக்களாக விளங்கும் கால்வாய்களில் திருத்தந்தை, அவரது முன்னோடியான அருளாளர் இரண்டாம் ஜான் பாலைப் போல, அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றில் பயணம் செய்தார்.
திருத்தந்தை வெனிஸ் நகரில் பயணம் மேற்கொண்ட அதே ஞாயிறன்று, இத்தாலியின் Lampedusa என்ற துறைமுகம் நோக்கி பல அகதிகளை ஏற்றி வந்த படகு பாறைகளில் மோதிச் சிதறியது. அப்படகில் பயணம் செய்த சுமார் 400 அகதிகள் காப்பாற்றப்பட்டனர்.
அகதிகளை எப்போதும் வரவேற்று வாழ்வளிக்கும் பணிக்கு திருச்சபை அழைக்கப்பட்டுள்ளதென்று வெனிஸ் நகரில் திருத்தந்தை இஞ்ஞாயிறன்று ஆற்றிய மறையுரையில் குறிப்பிட்டார்.
திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் 300000 மக்கள் கலந்து கொண்டதாகவும், இவர்களில் பலர் Croatia, Slovenia, Austria, Germany ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்ததாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.