2011-05-07 15:27:38

கஜக்ஸ்தான், யுரேனியம் விநியோகிப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது


மே07,2011. கஜக்ஸ்தான் குடியரசு, இரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்கு யுரேனியம் விநியோகிப்பதில் உலகில் முக்கிய இடம் வகிக்கின்றது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
கஜக்ஸ்தான் நாட்டை பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கைக்குரிய பங்காளராக நோக்குவதாகவும் அச்செய்தி நிறுவனம் கூறியது.
2010ம் ஆண்டில் உலகில் யுரேனியம் தயாரிப்பு ஆறு விழுக்காடு அதிகரித்திருந்ததாகவும் அதாவது உலகில் 2009ல் 50,772 டன்களாக இருந்த யுரேனிய உற்பத்தி 2010ல் 53,663 ஆக அதிகரித்தது எனவும் உலக அணு கழகம் கூறியது. எனினும் இத்தயாரிப்பைக் கனடாவும் ஆஸ்திரேலியாவும் குறைத்து வருகின்றன, அதேசமயம் கஜக்ஸ்தான் இதே காலக்கட்டத்தில் 17,803 டன்களை அதிகரித்திருக்கின்றது, இது 2018ல் முப்பதாயிரம் டன்னை எட்டக்கூடும் என்றும் உலக அணு கழகம் கூறியது.
உலகில் தற்போது 53 புதிய அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 2030ல் மேலும் 500 அணுமின் நிலையங்கள் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.