2011-05-07 15:25:43

அமெரிக்க ஐக்கிய நாட்டில் குருத்துவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு இளம் வயதினர் மத்தியில் அதிகரித்து வருகின்றது


மே07,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் குருத்துவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போக்கு இளம் வயதினர் மத்தியில் அதிகரித்து வருகின்றது என அந்நாட்டு ஆயர் பேரவை வெளியிட்ட புள்ளி விபரக் கணக்கெடுப்புக் கூறுகிறது.
இவ்வாண்டில் குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25க்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதிலிருந்து இளவயது குருக்களின் திருநிலைப்பாடு அதிகரித்து வருவதை அது காட்டுகின்றது என்று அக்கணக்கெடுப்பு மேலும் கூறியது.
இவர்களில் 69 விழுக்காட்டினர் ஐரோப்பிய அமெரிக்க இனத்தைச் சேர்ந்த வெள்ளையர்கள், 15 விழுக்காட்டினர் இலத்தீன் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் 10 விழுக்காட்டினர் ஆசிய பசிபிக் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாண்டில் குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெற்றவர்களில் 21 விழுக்காட்டினர், குருத்துவப் பயிற்சிக் கல்லூரியில் சேருவதற்கு முன்னர் உலக இளையோர் தினத்தில் கலந்து கொண்டவர்கள் எனவும் அமெரிக்க ஆயர் பேரவை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.