2011-05-06 16:46:41

பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையோடு செயல்படுகின்றனர்


மே06,2011. பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பாகக் காணப்படும் பதட்டநிலைகளால் அந்நாடெங்கும் திருச்சபையும் கிறிஸ்தவக் குழுக்களும் எச்சரிக்கையோடு செயல்படுகின்றன என்று UCAசெய்தி நிறுவனம் கூறியது.
அல்-கெய்தா தலைவர் பின் லேடன் பற்றிய செய்திகளை உலகம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் வேளை, பாகிஸ்தானில் பல கிறிஸ்தவப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பின்லேடன் பற்றிப் பொதுப்படையாகப் பேசுவதில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்கள் என்றும் UCAசெய்தி நிறுவனம் கூறியது
இதற்கிடையே, பாகிஸ்தானின் முக்கிய சமயக் கட்சியான Jamaat-e-Islami, பாகிஸ்தான் அரசையும் புலனாய்வு அமைப்பையும் திறமையற்றவை என்று குறைகூறி, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எதிரானப் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது








All the contents on this site are copyrighted ©.