2011-05-06 16:43:40

டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி : குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அறநெறிக்குப் புறம்பான செயல்கள் என்று சொல்லும் கடமையைக் கொண்டிருக்கிறேன்


மே06,2011. குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அறநெறிக்குப் புறம்பான செயல்கள் என்று சொல்லும் கடமையைத் தான் கொண்டிருப்பதாக லிபியாவின் டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மர்த்தினெல்லி கூறினார்.
லிபியாவில் நடத்தப்படும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஒப்புதலின் பேரில் இடம் பெறுகின்றன, எனவே தான் ஆன்மீகக் காரியங்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற அறிக்கைகள் தனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பதாக Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார் ஆயர் மர்த்தினெல்லி.
குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்துவது பற்றித் தீர்மானம் செய்வதற்கு ஐ.நா.வுக்கோ, நேட்டோவுக்கோ, ஐரோப்பிய சமுதாய அவைக்கோ எவ்வித நன்னெறி சார்ந்த அதிகாரம் கிடையாது என்றும் ஆயர் தெரிவித்தார்.
உண்மையில் தான் யாருடைய அரசியல் நடவடிக்கையிலும் தலையிட விரும்பவில்லை, ஆயினும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் அறநெறிக்குப் புறம்பான செயல்கள் என்று சொல்லும் கடமையைத் தான் கொண்டிருக்கிறேன் என்று ஆயர் மர்த்தினெல்லி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.