2011-05-06 16:47:51

இரஷ்யாவில் 82 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்


மே06,2011.இரஷ்யாவில் பெரும்பாலான மக்கள் அதாவது ஏறக்குரைய 82 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்று அந்நாட்டு பொதுநலக் கருத்து அறக்கட்டளை கூறியது.
இரஷ்யாவின் 44 மாநிலங்களில் பதினெட்டும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் எடுத்த ஆய்வின்படி, 13 விழுக்காட்டினரே கடவுளில் நம்பிக்கை இல்லை என்று கூறியதாகத் தெரிகிறது.
தலைமுறைகளாக கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த இரஷ்யாவில் தற்போதைய இந்த ஆய்வின் மூலம், அந்நாடு, ஐரோப்பாவில் அதிகமான சமய உணர்வு கொண்ட நாடாகக் கணிக்கப்பட்டுள்ளது.
கடவுள் நம்பிக்கை கொண்டவர்களில் 27 விழுக்காட்டினர் எந்தவித நிறுவன அமைப்பைச் சார்ந்த மதத்தைச் சாராதவர்கள் ஆவர்.
இரஷ்யாவில் இருவருக்கு ஒருவர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.