2011-05-06 16:45:44

2008ல் இடம் பெற்ற கந்தமால் படுகொலைகள் : நியாயம் கேட்டு கிறிஸ்தவர்கள் தர்ணா


மே06,2011. 2008ம் ஆண்டில் ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதில் மூன்று பேரின் பங்கு குறித்து தேசிய புலன் விசாரணை நிறுவனம்(NIA) விசாரணையைத் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கிறிஸ்தவப் பொது அவை(CGIC) இவ்வெள்ளிக்கிழமை ஒருநாள் தர்ணாவை நடத்தியது.
இப்படுகொலை விவகாரம் தொடர்பான புலன்விசாரணை மற்ற மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டுமென்று CGIC அவை வலியுறுத்தியது.
Indrash Kumar, Swami Asimanand, இராணுவத்தளபதி Shrikant Purohit ஆகியோர் இவ்விவகாரத்தில் சந்தேகிக்கப்படுகிறார்கள். 2008ல் கந்தமாலிலும் கர்நாடகாவிலும் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறைகளில் இந்துத்துவ தீவிரவாதிகள் முக்கிய பங்கு வகித்தனர் என்று CGIC தலைவர் ஷாஜன் ஜார்ஜ் கூறினார்.
2008ல் முஸ்லீம்களுக்கு எதிரானத் தாக்குதல்களைத் திட்டமிட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள Pragya Singh Thakur அளித்த வாக்குமூலத்தின்படி, இராணுவத்தளபதி Prasad Srikant Purohit, 2008, ஆகஸ்டில் கந்தமாலிலும் கர்நாடகாவிலும் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கு எதிரான வன்முறைகளில் மூளையாகச் செயல்பட்டவர் என்று தெரிகிறது.







All the contents on this site are copyrighted ©.