2011-05-05 13:48:14

மே 06 வாழ்ந்தவர் வழியில்.....


மரியா மொந்தேசோரி (Maria Montessori) என்பவர் இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர். இத்தாலியில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண். இவர் சிறு குழந்தைகளைப் பயிற்றுவிக்க ஒரு புதிய முறையை உருவாக்கி 1907 ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி உரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார்.
இவரது கல்விமுறையைப் பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள் சிறு வயதிலேயே விளையாட்டைவிட வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும் அதிகம் களைப்படைவதில்லை. இதனால் இவரது முறையை ஐரோப்பா முழுவதும் பயன்படுத்தத் துவங்கினர். நெதர்லாந்தில் மிகப் புகழ் வாய்ந்த ஆசிரியப்பயிற்சி பள்ளியை நிறுவினார். பின்னாளில் 1939 முதல் 1947 வரை இந்தியாவிலும் இலங்கையிலும் பணியாற்றினார்.
மரியா மொந்தேசோரி கல்வி முறையில் குழந்தைகள் தாமாக முன்வந்து செயல்படுவதற்கும், தங்களது தேவைகளைத் தாங்களே செய்து கொள்ளவும் வழி செய்கிறது. இந்த முறையில் நடக்கும் வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லை, மாறாக அவர்கள் வழிநடத்துபவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். குழந்தைகள் புதியவற்றைத் தாமாக முன்வந்து ஆர்வமுடன் கற்றுக் கொள்ளவும். அவர்கள் தவறான பழக்கங்களை கற்றுக் கொள்ளாமலும், குழந்தைகளின் முயற்சிகள் வீணாகிப் போகாமலும் பார்த்துக் கொள்வதே இந்த வழிநடத்துபவர்களின் பணி. மரியா மொந்தேசோரி 1870ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்து 1952ம் ஆண்டு மே 6ம் தேதி காலமானார்








All the contents on this site are copyrighted ©.