2011-05-05 15:52:20

பொருளாதாரச் சரிவு உலகின் பெரும் செல்வந்தர்களை இன்னும் செல்வமுடையவர்களாக மாற்றியுள்ளது


மே 05,2011. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகை வருத்திய பொருளாதாரச் சரிவு உலகின் பெரும் செல்வந்தர்களை இன்னும் செல்வமுடையவர்களாக மாற்றியுள்ளது என்று ஓர் உலக அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தப் பொருளாதாரச் சரிவு உண்டான 2009ம் ஆண்டில் பெரும் கோடீஸ்வரர்கள் என்ற கணக்கில் 1011 பேர் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 1210 ஆக உயர்ந்துள்ளதென்றும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை உயர்ந்த இதே காலக் கட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 40 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
மூன்றாம் உலக நாடுகளின் கடன்களை நீக்கும் வழிமுறைகளை அறிய ஈடுபட்டுள்ள CCTWD என்ற ஓர் அமைப்பு அண்மையில் வெளியிட்ட இந்த அறிக்கையில், உலகக் கோடீஸ்வரர்களின் செல்வ மதிப்பீடு கடந்த இரு ஆண்டுகளில் 3500 பில்லியன் டாலரிலிருந்து 4500 பில்லியன் - அதாவது, 450000 கோடி டாலர்களாக உயரந்துள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களான இவர்கள் ஆண்டொன்றுக்கு இரண்டு விழுக்காடு வரி செலுத்தினால், அவ்வரித் தொகையான 8000 கோடி டாலர்களைக் கொண்டு வறியோரின் அடிப்படைத் தேவைகளை அடுத்த பத்து ஆண்டுகள் தீர்க்க முடியும் என்று இவ்வறிக்கை கணித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.