2011-05-05 15:50:49

திருத்தந்தை : திருமறைநூல்கள் அவற்றின் உண்மையான இயல்புகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கப்படுவது திருச்சபையின் வாழ்வுக்கு இன்றியமையாதது


மே 05,2011. திருமறை நூல்களுக்குக் கொடுக்கப்படும் விளக்கங்கள் அவற்றின் உள்தூண்டுதல்களை மறப்பதாயும் அல்லது அவற்றைப் புறக்கணிப்பதாயும் இருந்தால் அவை கடவுளிடமிருந்து வந்தவை என்ற மிக முக்கிய மற்றும் மதிப்புமிக்க பண்பை இழக்கக்கூடும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்திங்களன்று வத்திக்கானில் தொடங்கிய பாப்பிறை விவிலியக் கழகத்தினரின் ஐந்து நாள் கூட்டத்திற்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, இந்த விளக்கங்கள் மனித வார்த்தைகளுக்குள் அடங்கிவிட்டால் திருமறைநூல் கொண்டுள்ள விலைமதிப்பற்ற கருவூலத்தை நாம் இழக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.
திருமறைநூல்கள் அவற்றின் உண்மையான இயல்புகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கப்படுவது திருச்சபையின் வாழ்வுக்கும் மறைப்பணிக்கும் இன்றியமையாதது என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.திருத்தந்தையின் இச்செய்தியானது திருப்பீட விசுவாசக்காப்புப் பேராயத் தலைவர் கர்தினால் William Levadaவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஐந்து நாள் கூட்டமானது, “திருவிவிலியத்தின் உள்தூண்டுதல்களும் உண்மையும்” என்ற தலைப்பில் நடைபெறுகிறது.







All the contents on this site are copyrighted ©.