2011-05-03 16:09:17

மே 04, வாழ்ந்தவர் வழியில்...


தென்னிந்தியாவில் தோன்றி, உலகெங்கும் புகழ்பெற்றுள்ள கர்நாடக இசையின் முப்பெரும் தூண்களில் ஒருவரான தியாகராஜர், தஞ்சைக்கருகே திருவாரூரில் 1767ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி பிறந்தார். முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, தியாகராஜர் ஆகிய மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இராம பக்தரான தியாகராஜர், இளமை முதல் இசைப்புலமை பெற்றிருந்தார். இவரது இசைப்புலமையைக் கேள்விப்பட்ட தஞ்சை மன்னர், இவரைத் தன் அரசவைப் பாடகராக இருக்கும்படி அழைப்பு விடுத்தார். இறைவனை மட்டுமே தன் பாடல்களின் வழியே புகழ்ந்து வாழ்ந்த தியாகராஜர், மன்னரின் இந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.
இராமாயணத்தை வடித்த வால்மீகி முனிவர் 24,000 பாக்களில் அக்காவியத்தை இயற்றியதைப் போல, தியாகராஜரும் இராமர் மீது 24,000 கீர்த்தனைகளை இயற்றினார் என்று கூறப்படுகிறது. பக்தி இசைக்கென தன் வாழ்வை அர்ப்பணித்த தியாகராஜர் 1847ம் ஆண்டு தன் 79வது வயதில் காலமானார்.
கர்நாடக இசையில் ஈடுபாடு கொண்ட கோடிக்கணக்கான மக்கள் தியாகராஜரின் கீர்த்தனைகளில் பக்திப் பரவசம் அடைந்திருப்பர் என்பதில் ஐயம் இல்லை. ஒவ்வோர் ஆண்டும் தியாகராஜர் நினைவாக, திருவையாறில் தியாகராஜர் ஆராதனை எனும் இசைவிழா நடைபெறுகிறது







All the contents on this site are copyrighted ©.