2011-05-03 16:21:40

இத்தாலியும் நேட்டோ படைகளும் ஒரு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி வலியுறுத்தல்


மே03,2011. மனித வாழ்க்கை, குடும்பம் மற்றும் லிபியா மீதான மதிப்பின் அடிப்படையில் இத்தாலியும் நேட்டோ படைகளும் ஒரு வார இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு டிரிப்போலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி வலியுறுத்தினார்.
லிபிய அதிபர் கடாபியின் இளைய மகனும் இரண்டு பேரக் குழந்தைகளும் கொல்லப்பட்டதற்குப் பின்னர் இவ்வாறு கேட்டுக் கொண்ட ஆயர் மார்த்தினெல்லி, லிபியா மீது போர் தொடுத்துள்ள அனைத்து நாடுகளும் அப்பாவி மக்களைக் கொல்வதையும் குண்டுகள் வீசுவதையும் நிறுத்துமாறு கூறினார்.
தொடர்ந்து இடம் பெறும் குண்டு வீச்சு தாக்குதல்கள் குறித்து மக்கள் சோர்வடைந்து விட்டார்கள், அனைத்துத் தாக்குதல்களும் நிறுத்தப்படுமாறு அவர் கூறினார்
கடாபியின் சொந்தக் கோட்டையான Bab al-Aziziya மீது நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் கடாபியின் இளைய மகன் Saif Al-Arab Gaddafi கொல்லப்பட்டார். அவருக்கு இத்திங்களன்று டிரிப்போலியில் அரசு மரியாதையுடன் அடக்கச்சடங்கு நிறைவேற்றப்பட்டது. இதில் ஆயர் மார்த்தினெல்லியும் கலந்து கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.