2011-05-02 16:07:04

லிபியாவின் அமைதிக்காக அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையை வேண்டுவதாக அறிவித்தார் அந்நாட்டு ஆயர்.


மே 02, 2011. லிபியாவில் பல இடங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியும், பல அப்பாவி மக்கள் உயிரிழந்தும் வரும் நிலையில், நாட்டின் அமைதிக்காக புதிய அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையை வேண்டி செபிப்பதாக கூறினார் தலைநகர் டிரிப்பொலியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மர்த்தினெல்லி.
பல நகர்களில் பொதுமக்கள் பெருமளவில் தாக்கப்படுகிறார்கள், அவர்களைத் தாக்குவது யார் எனத் தெளிவாகத் தெரியவில்லை என்ற ஆயர், விரைவில் மருத்துவமனைகளுக்குச் சென்று காயமுற்றவர்களை தான் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்கெனக் கூறி, கூட்டு நாடுகள் நடத்தும் தாக்குதலில் பொது மக்களும் பெருமளவில் உயிரிழந்துள்ளார்கள் எனக் குற்றம் சாட்டிய ஆயர் மர்த்தினெல்லி, இடைக்காலப் போர் நிறுத்தமே தற்போதைய உடனடித் தேவை என்றார்.
1997ல் லிபியாவுடன் வத்திக்கானின் அரசியல் உறவை உருவாக்கிய திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையை நாடுவதன் மூலம் லிபியாவில் அமைதியைக் கொணர முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டர் ஆயர்.








All the contents on this site are copyrighted ©.