2011-05-02 15:22:00

மே 03 வாழ்ந்தவர் வழியில் .....


ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் (James Joseph Brown) என்பவர், சோல் என்று வழங்கப்படும் ஓர் ஆத்மார்த்தமான இசை வடிவத்தின் தந்தை (The Godfather of Soul) என்றழைக்கப்படுகிறார். கேளிக்கைத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் (The Hardest Working Man in Show Business) என்ற பெயரும் இவருக்கு இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். பலத்த குரலில் பாடும் பழக்கம், வெறிபிடித்த ஆட்டம் மற்றும் தனித்தன்மையுள்ள தாளக்கட்டுக்குச் சொந்தக்காரர். பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர் இவர். Gospel இசை எனப்படும் ஆலயங்களில் பாடும் இசை மற்றும் rhythm and blues இசை வகைகளிலிருந்து Soul இசை மற்றும் funk இசை உருவாக மிகப்பெரும் சக்தியாக இருந்தவர் ஜேம்ஸ் ப்ரௌன். இவைத் தவிர, ராக் (rock), ஜாஸ்(Jazz), டிஸ்கோ (disco), டான்ஸ் (dance), ரெக்கே (reggae), ஆஃப்ரோ-பீட் (afrobeat), ஹிப் ஹொப் (hip hop) போன்ற இசை முறைகளிலும் இவரது பதிப்பைப் பார்க்க முடியும். இவர் 1933ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்தார். 2006ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி காலமானார்.







All the contents on this site are copyrighted ©.