2011-04-28 15:55:08

3. கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து வன்முறைகளைச் சந்திக்க வேண்டும் - மங்களூர் ஆயர்


ஏப்ரல் 28,2011. கிறிஸ்தவர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால் நாம் இன்னும் பல தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலை அதிகமாகும், எனவே நாம் ஒருங்கிணைந்து இந்த ஆபத்தைச் சந்திப்போம் என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
புனித வாரத்தில் கர்நாடகாவின் இரு இடங்களில் சங்பரிவார் என்ற அடிப்படை வாத இந்துக் குழுவினரால் நடைபெற்ற வன்முறைகளின் எதிரொலியாக ஒன்றுகூடிய கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகளின் கூட்டத்தில் பேசிய மங்களூர் ஆயர் Aloysius Paul D'Souza இவ்வாறு கூறினார்.
அனைத்து கிறிஸ்தவர்களின் கர்நாடகா ஒருங்கிணைப்புக் குழு இப்புதனன்று மங்களூரில் நடத்திய இந்தக் கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட கிறிஸ்தவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்து அடிப்படை வாதிகளால் தாக்கப்படும்வரை காத்திருக்காமல், இன்னும் பல வழிகளிலும் ஒற்றுமையை வளர்த்து, ஒருவருக்கொருவர் உதவிகள் செய்வது சிறந்தது என்று கிறிஸ்தவ சபைகள் ஒன்றின் ஆயர் யாக்கூப் கூறினார்.2008ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைத்தபின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன என்றும், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மூன்று குழந்தைகள் காப்பகங்களில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்றும் UCAN செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.