2011-04-28 15:54:53

2. ஒரிஸ்ஸாவின் கந்தமால் பணிகளில் சிபிஐ விசாரணைக்கு கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்பு


ஏப்ரல் 28,2011. கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தைக் குறித்த விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டுமென்று நீதி மன்றம் கூறியுள்ளதை ஒரிஸ்ஸா கிறிஸ்தவத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஒரிஸ்ஸா மாநிலத்தின் கந்தமால் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றப்பணிகளை கந்தமால் ஊராட்சியிடம் ஒரிஸ்ஸா அரசு அளித்திருந்தது. இந்தப் பணிகளில் காணப்பட்ட பல ஊழல்களை சிபிஐ தீர விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதி மன்றம் அண்மையில் கட்டளை பிறப்பித்தது.
கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை ஊராட்சியிடம் ஒப்படைத்தது சரியல்ல என்பதை இந்தக் கட்டளை நிரூபித்துள்ளது என்றும், இது போன்ற திட்டத்தை அரசு அதிகாரிகள் மேற்கொள்வது இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தோல்வியுறச் செய்யும் என்றும் பெர்ஹாம்பூர் ஆயர் சரத் சந்திர நாயக் கூறினார்.2006 - 2007 ஆகிய இரு ஆண்டுகளில் பெர்ஹாம்பூர் மறைமாவட்டப் பகுதியில் முன்னேற்றத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டத் தொகையில் 75 விழுக்காட்டுத் தொகையை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தியதை ஓர் அரசு சாராத் தன்னார்வக் குழு கண்டுபிடித்து, நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, உச்ச நீதி மன்றம் இந்த விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.