2011-04-27 16:41:41

பாஸ்காத் திருவிழிப்புத் திருச்சடங்கின் போது இறையடி சேர்ந்த சீன ஆயர்


ஏப்ரல் 27,2011. சீன ஆயர் Peter Li Hongye சென்ற சனிக்கிழமை இரவு பாஸ்காத் திருவிழிப்புத் திருச்சடங்கின் போது இதய நோயால் பாதிக்கப்பட்டு, இறையடி சேர்ந்தார். இவரது அடக்கம் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
91 வயதான ஆயர் Li திருத்தந்தைக்குப் பிரமாணிக்கமாய் இருந்ததால், கடந்த 30 ஆண்டுகளாய் சீன அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் 2004ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் இச்செய்தி கூறுகிறது.
1944ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Li கைது செய்யப்பட்டு, 1955 முதல் 1970 வரை கடுமையான உழைப்புக்கு உள்ளாக்கப்பட்டார். சீன அரசின் ஒப்புதல் இன்றி, இவர் 1987ம் ஆண்டு (Luoyang) லுவோயாங் மறைமாவட்டத்தின் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.10000 கத்தோலிக்கர்களைக் கொண்ட லுவோயாங் மறைமாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் இவரது இறுதி சடங்குகளில் மக்கள் கலந்து கொள்வதற்குச் சீன அரசு தடை விதித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.