2011-04-27 16:40:56

கர்நாடகாவில் புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள்


ஏப்ரல் 27,2011. புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகள் மத சார்பற்ற இந்தியாவுக்கு ஒரு பெரும் அவமானமான நிகழ்ச்சியென்று கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
புனித வெள்ளியன்று கர்நாடகாவில் உள்ள பகல்கோட் (Bagalkot) மற்றும் தெவன்கெரே (Devangere) மாவட்டங்களின் இரு கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் புனித வெள்ளி திருச்சடங்குகளின் போது தாக்கப்பட்டுள்ளன.
இந்து அடிப்படை வாதக் குழுக்களில் ஒன்றான சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த 50 பேர் ஆயுதங்கள் தாங்கிய வண்ணம் இரு கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலங்களில் சடங்குகளை நிறுத்தி, அங்கு இருந்த கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
இத்தாக்குதல்களில் வழிபாடுகளை நடத்திய மத போதகர்களை இக்குழுவினர் தாக்கியதாகவும், இதைக் கண்டும் காவல்துறையினர் செயல்படாமல் இருந்தனர் என்றும் இந்திய கிறிஸ்தவர்களின் உலகக் குழுவினர் என்ற அமைப்பின் தலைவர் சஜன் ஜார்ஜ் கூறினார்.கர்நாடகாவில் தொடர்ந்து கிறிஸ்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகள் அதிகரித்து வருகிறதென்றும் மாநில அரசு இவ்வன்முறைகளை நிறுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் ஜார்ஜ் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.