2011-04-27 16:35:29

ஏப்ரல் 28. – வாழ்ந்தவர் வழியில்........,


1932 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ந்தேதி மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான (மஞ்சள் காமாலை) தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த Max Theiler என்பவர் இத்தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார். இதற்கென இவருக்கு 1951ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நொபெல் விருது வழங்கப்பட்டது.
தடுப்பு மருந்து என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது. இந்தத் தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும் அந்த நுண்ணுயிரின் பலவீனமாக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிலிருந்தோ அல்லது அதன் நச்சுப்போருளில் இருந்தோ பெறப்பட்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த மருந்து உடலினால் வெளிப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்து சிதைக்க, உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை மேம்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும்போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும்.
இந்தத் தடுப்பு மருந்தானது தடுப்பூசி மூலம் உடலினுள் செலுத்தப்படும்.

நோய்த்தடுப்பு அவசரமானது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆண்டில் தொடர்ச்சியான நோய்த்தடுப்பு மருந்து தேவை.
குழந்தைகளின் ஆரம்ப நிலையிலேயே நோய்த்தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் இறப்பில், கக்குவான் இருமலால் பாதியும், இளம்பிள்ளை வாதத்தினால் மூன்றில் ஒரு பகுதியும் மற்றும் தட்டம்மையால் கால்பங்கும் காரணமாக அமைகிறது.
தடுப்பூசி போடப்படவில்லை என்றால் கடந்த 20 வருடங்களில் 11 இலட்சம் குழந்தைகள் மரணமடைந்திருப்பார்கள் என்கிறது அண்மை அறிக்கை ஒன்று.
இன்றைய உலகில், பிறந்தவுடன் தரப்படவேண்டிய தடுப்பூசி, 6 வாரத்தில், 10 வாரத்தில், 14 வாரத்தில், 9 மாதங்களில் என்று தடுப்பூசி அட்டவணை தொடர்கிறது.
தற்பொழுது,
•பெரிய அம்மை (ஸ்மால் பாக்ஸ்) உலகில் அறவே கிடையாது
•தட்டம்மை, சில குழந்தைகளை பாதித்தாலும் அதனால் யாரும் குருடாவதில்லை
•போலியோவினால் ஒரு குழந்தை நடக்க முடியாமல் போனது 15 வருடங்களுக்கு முன்னர் தான் என்று கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.