2011-04-26 15:15:35

திருப்பாடல் 24


RealAudioMP3 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் யாராலும் மறக்க முடியாத நாள். அன்று தான் சுனாமி பேரலை பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை பலி கொண்டது. ஒரு பாவமும் அறியாத குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியோர்கள் என எவ்வித பேதமும் இல்லாமல் வாரி சுருட்டிக் கொண்டு போனது. கன்னி குமரி மாவட்டத்தில், குளச்சல், கடிய பட்டினம் தொடங்கி நாக பட்டினம், வேளாங்கண்ணி என ஒட்டு மொத்த தமிழகத்தையே கதிகலங்க வைத்தது. இதை கேட்ட அனைவருமே .வேளாங்கண்ணி லையுமா இப்படி? மாதவே நீயும் இப்படி பண்ணிட்டியா? உனக்கு கண்ணே இல்லையா? என்று பல கேள்விகளை எழுப்பினர். புல விதமான பதில்கள், விளக்கங்கள் தர முயன்றோம். அவைகளில் ஒன்று: இந்த மா பெரும் அழிவிற்கு நாம் தான் கரணம். மக்கவே மக்காது என்று தெரிந்தும் பிளாஸ்டிக், கண்ணாடி போன்ற தேவை இல்லாத கழிவுப் பொருட்களை பூமித்தாயின் வயிற்றுக்குள் புதைத்தோம். பல ஆண்டுகளாக ஜீரணிக்க முயற்சி செய்தும் முடியாத பூமித்தாய் அதற்கு மேலும் அவளால் அடக்க முடியாததால் வெடித்து சிதறினாள். அது தான் கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பம். அதன் விளைவு தான் இந்த சுனாமி. எனவே சுனாமி நமக்கு நாமே எழுதிகொண்ட தீர்ப்பு. இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியை முறைகேடாக பயன்படுதியததால் வந்த விளைவு தான் இந்த சுனாமி என்பதும் நாம் தந்த பதில்களில் ஒன்று.
நாம் இன்று சிந்திக்கவிருப்பது திருப்பாடல் 24
இதன் முதல் வரியே இந்த பூமி மனிதர்களாகிய நமக்கு சொந்தமிலையென தௌ;ள தெளிவாக கூறுகிறது.
24 : 1 மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடயன. நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
அன்பார்ந்தவர்களே! உண்மையில், நாம் அனைவரும் இந்த பூமியில் வாடகைக்கு குடி ஏறி இருப்பவர்கள். . ஒரு வாடகைகாரர் அவர் குடி இருக்கும் வீட்டில் எதையும் கட்டவோ இடிக்கவோ மாற்றி அமைக்கவோ முடியமா? கண்டிப்பாக முடியாதல்லவா? அதே போல தான் நாமும் இந்த உலகத்தில் எதையும் கட்டவும் இடிக்கவும் மாற்றி அமைக்கவும் முடியாது. ஒரு வாடகைகாரருக்கு என்ன உரிமை இருக்கும்? அந்த குறைந்த பட்ச உரிமை மட்டுமே நமக்கும் உண்டு உண்மையில் இந்த உலகத்தை நமது இஷ்டத்திற்கு மாற்றி அமைக்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனாலும் கடவுள் நம் மேல் கொண்ட அன்பினால் கட்டவும், இடிக்கவும் மாற்றி அமைக்கவும் உரிமை தந்திருக்கிறார் என்பதை தான் தொடக்க நுல் 1 :23 இப்படிச் சொல்கிறது.
எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணை பண்படுத்த அவனை ஏதோன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
அன்பார்ந்தவர்களே! இறைவன் ஒரு படைப்பாளி. அவர் படைத்த படைப்பினை மாற்றி அமைக்கக்கூடிய உரிமையை பெற்றிருக்கின்ற மனிதன் ஒரு உடன்படைப்பாளி. படைப்பாளியான இறைவன் இந்த மண்ணுலகை படைத்தாரென்றால் உடன் படைப்பாளியாக மனிதன் இம்மண்ணுலகை காக்க வேண்டிய கடமையைப் பெறுகிறான். ஆக்குவது மட்டுமல்ல, காப்பதும் படைப்பாளியின் கடமையல்லவா? அந்த காக்கும் கடமை உடன்படைப்பாளியாகிய மனிதனைச் சார்ந்தது.
தொடக்கநூல் முதல் சொற்றொடர் சொல்கிறது.
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுது மண்ணுலகு உருவமற்று வெறுமையாக இருந்தது.
ஆக கடவுள் முதன் முதலாக படைத்தது மண்ணுலகு கடவுளின் இறுதி படைப்பு மனிதன். மொத்தத்தில் மண்ணுலகு, மனிதன் இரண்டுமே இறைவனின் படைப்புகள். இறைவன் மனிதனை தன் சாயலாக படைத்தார். தனது பிரதிநிதியாகப் படைத்தார். படைப்பின் சிகரமான மனிதன் மண்ணுலகை காக்க கடைமைப் பட்டிருக்கிறான்.
அன்பார்ந்தவர்களே! கடவுளோடு சேர்ந்து உடன் படைப்பாளியாக இருந்து மண்ணுலகை காக்க வேண்டிய மாபெரும் கடமையைப் பெற்றிருக்கின்ற நாம் இந்த மண்ணுலகை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை சிந்திக்க வேண்டாமா?
மண்ணுலகை குறிக்க நாம் பொதுவாக பூமி தாய் என்று வார்த்தையையே பயன்படுத்துகிறோம். நம்ம பெத்து எடுத்து இருக்க இடமும் குடுத்து இறந்த பிறகும் நம்மை சுமக்கும் நம் பூமி தாய்க்கு ஒவ்வாதவற்றை கொடுத்து விடுகிறோம். மனித உடற் கூறுகளில் முக்கியமான ஒன்றான வயிற்றுக்கு ஒவ்வாதஒன்றை செலுத்தி விட்டால் நாம் நிலை குலைந்து போய் விடுகிறோம் .அதே போல தான் நாம் நம் பூமி தாயின் வயிற்றுக்குள் தேவை இல்லாத ஒவ்வாத பொருள்களை திணிக்கிறோம். அது நம் பூமி தாயின் வயிற்றை ரணகள மாக்குகிறது. தொழிற்சதன கழிவுகளை மண்ணில் புதைப்பது இயற்கை வளங்கள் மற்றும் தாது பொருள்களை தவறான முறையில் பயன்படுத்தி அவற்றையும் மண்ணில் புதைப்பது விவசாய நிலங்களில் தேவை இல்லாமல் pesticides மற்றும் herbicides போன்ற நச்சு மருந்துகளை பயன்படுத்தி நிலத்தை பாழ்படுத்துவது மற்றும் தேவை இல்லாமல் தெரு ஓரங்களில் கிடக்கும் நச்சு பொருள்களை உரம் என்ற பெயரில் விவசாயத்தில் பயன்படுத்தும்போது பூமி தாயை அங்கம் அங்கமாக நாம் வதைக்கிறோம், சிதைக்கிறோம். . மக்கவே மக்காத பிளாஸ்டிக், பாட்டில்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி குடுவைகள், பயன்படுத்த பட்ட கார்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பூமி தாயின் வயிற்றை சின பின்னமாக்குகிறது என பல விளம்பரங்களில் பார்த்தாலும் நாம் மீண்டும் மீண்டும் அவற்றையே செய்து மேலும் சித்திரவதை படுத்துகிறோம். நாம் செய்கின்ற இந்த கொலை பாதக செயல்கள் சுனாமியாக நம்மையே தாக்குகின்ற போது தான் நம் செயல்களின் விளைவு நமக்கு தெரிகின்றது.
அன்பார்ந்தவர்களே! நாம் இவ்வாறு இறைவன் படைத்த இந்த மண்ணுலகை மாசுபடுத்துவது மனித, விலங்கு மற்றும் தாவர உயிர்களுக்கும் சுவாச முறை பிரச்சனைகள், தோல் நோய்கள், பல்வேறு கேன்சர் மற்றும் பிறப்பு கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. நாம் பயன்படுத்துகின்ற பல்வேறு பொருட்கள் மண்ணை மாசு படுத்துகின்றன. அந்த மாசு படுத்தப்பட்ட மண் நேரடியாக அல்லது மறைமுகமாக மனிதனை பாதிக்கின்றது. ஆறுகளில் குளிப்பது மனிதனுடைய தோலை பாதிக்கிறது. ஆற்று தண்ணிரை குடிப்பது பயன் படுத்துவது மாசுபடுதப்பட தண்ணீரில் வளர்ந்த பழங்கள் மற்றும் பயிர்களை உண்பது, மாசுபடுதப்பட காற்றை சுவாசிப்பது என எல்லாமே மனிதனை பாதிக்கின்றன.
திருபாடல் ஆசிரியர் கேட்கிறார்
24: 3. ஆண்டவரது மலையில் ஏற தகுதி உள்ளவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்க குடியவன் யார்?
இப்படி கடவுள் படைத்த படைப்பை, மண்ணுலகை சீர்குலைத்த மனித இனம் கடவுள் முன் நிற்க தகுதியற்றது என்று தான் சொல்ல வேண்டும். தகுதி பெற வேண்டிமையின் கண்டிப்பாக நாம் செய்கின்ற இந்த கொலைபாதக செயல்களை நிறுத்த வேண்டும். பயன்படுத்திய பொருட்களை குப்பைகளாக போடுவது எவ்ளவோ பெரிய ஆபத்தை விளைவிகின்றன என்பதை எல்லா மக்களுக்கும் சொல்லிக்கொடுத்து அவற்றை குப்பைகளாக மாற்றாமல் அவற்றை மீண்டுமாக பயன்படுதுவதுகு ஏற்றவாறு சுழற்சி முறைகளை உருவாக்க வேண்டும். தனி மனித கழிவுகள் குப்பைகள் சரியான முறையில் அப்புறபடுத்த பட வேண்டும். உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் குப்பைகள் வாழ்விடங்களுக்கு வெளியில் கொட்டப்பட வேண்டும். பேப்பர், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிகள் மீண்டுமாக பெறப்பட்டு சுழற்சி முறையில் பயன்படுத்த பட வேண்டும்.
இந்த திருப்பாடலின் முதல் வரியை வேறு கோணத்தில் பார்த்தால், இந்த உலகை நம்மை காத்து கொள்வதற்கான வழியை நமக்கு காட்டுகின்றன. மானிடர் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற கோணத்தில் பார்த்தோமென்றால் தந்தையாம் கடவுளால் படைக்கப்பட்ட இந்த மண்ணுலகு நமக்கும் சொந்தமாகும். பொதுவாகவே ஒரு பொருள் நமக்கு சொந்த மென்றால் அதை கண்ணும் கருத்துமாக தான் நாம் பார்த்துக்கொள்கிறோம். நம் அனைவர்க்கும் பொது என்று சொலும் பொது தான் நம் அதை தான்தோன்றி தனமாக பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறோம். அப்படி பயன்படுத்தி தான் ஏற்கனவே ஒரு சுனாமி யை கொண்டு வந்தோம். தந்தையாம் கடவுளால் படைக்கப்பட்ட இந்த மண்ணுலகு பிள்ளைகள் என்ற முறையில் நமக்கும் சொந்தம் என்பதை உணர்ந்து அதை சரியாக பயன்படுத்தி ஆண்டவருடைய திருமுன் தகுதி உள்ளவர்களாக வாழ திருபாடல் 24 நம்மை அழைக்கிறது
24: 5, 6: இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார் தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் என தீர்ப்பு பெறுவார். அவரை நாடுவோரின் தலை முறையினர் இவர்களே: யாகோபின் கடவுளது முகத்தை தேடுவோர் இவர்களே.








All the contents on this site are copyrighted ©.