2011-04-26 15:10:02

குறையும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்: பாலின விகித ஏற்றத்தாழ்வால் விபரீதம்


ஏப்ரல் 26,2011: இந்தியாவில் ஆண், பெண் பாலின விகிதம் மிகுந்த வேறுபாடுகளுடன் இருக்கும் நிலையில் ஆறு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கவலையை அதிகரிப்பதாக உள்ளது. இதே நிலை தொடருமானால், சமூக உறவுகளில் விரும்பத்தகாத மாற்றங்களை வருங்காலத் தலைமுறை சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை, அதே வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் கடந்த 1961ம் ஆண்டில் 1000:978 என்ற விகிதத்திலும் 2001ல் 1000:927 என்ற விகிதத்திலும் இருந்தன. தற்போது இவ்விகிதம் 1000:914 என்ற அளவை எட்டி இருக்கிறது.







All the contents on this site are copyrighted ©.