2011-04-26 15:12:16

ஏப்ரல் 27 வாழ்ந்தவர் வழியில் .....


ஃபெர்டினான்ட் மகெலன் (Ferdinand Magellan) என்ற மாலுமி, வட போர்த்துக்கல்லிலுள்ள சாப்ரோசா (Sabrosa) எனும் ஊரில் 1480ம் ஆண்டு பிறந்தவர். இவர், “Spice Islands” எனப்படும் இந்தோனேசியாவின் நவீன மாலுக்கு (Maluku) தீவுகளுக்கு மேற்கத்திய பாதைக் கண்டுபிடிப்பதற்கென ஸ்பெயின் அரசர் முதலாம் சார்லசுக்காக வேலை செய்தவர். இவர் 1519ம் ஆண்டு முதல் 1522ம் ஆண்டு வரை நடத்திய நாடுகாண் கடல் பயணம், உலகில் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து பசிபிக் பெருங்கடலுக்கு மேற்கொள்ளப்பட்ட முதல் நாடுகாண் பயணமாகும். "அமைதியான கடல்" என்று பொருள்படும் பெயரை பசிபிக் பெருங்கடலுக்கு இட்டவர் இவரே. மகெலன் தலைமையில் ஐந்து கப்பல்களில் 237 பேர் தொடங்கிய இந்த நாடுகாண் பயணத்தில் 18 பேர் மட்டுமே உலகைச் சுற்றி வந்து 1522ல் ஸ்பெயின் சென்றடைந்தனர். வழியில் பிலிப்பைன்சில் இடம் பெற்ற மாக்டன் சண்டையில் பழங்குடியினர் தலைவர் லாப்புலாப்பு என்பவரால் 1521ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி கொல்லப்பட்டார் மகெலன். இவர் கொல்லப்பட்ட பிறகு அந்த நாடுகாண் பயணிகள் குழுவை வழிநடத்திச் சென்றவர் ஸ்பெயினின் பாஸ்க் பகுதியைச் சேர்ந்த மாலுமி ஹூவான் செபஸ்டியான் எல்கானோ (Juan Sebastián Elcano) என்பவராவார்.
ராபர்ட்.டி.பாலர்ட் என்பவர் சொன்னார் : “ஒவ்வொருவருக்கும் தேடுதல் அவசியம் தேவை. கதவைத் திறந்து பார்க்காமல் மூடிய கதவையேப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி வாழ முடியும்”?







All the contents on this site are copyrighted ©.